Advertisment

4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு -மகிழ்ச்சியில் செந்தில்பாலாஜி

வரும் 19ஆம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி), சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக.

Advertisment

Aravakurichi

திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி. சண்முகையா, சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

டாக்டர் சரவணனும், செந்தில் பாலாஜியும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தினகரன் அணியில் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றார். அவர் காலமானதையடுத்து அந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சரவணன் அந்த தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Candidate By election Aravakurichi senthil balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe