Skip to main content

பள்ளி சீருடையுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவ-மாணவிகள்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வந்திருந்த பொது மக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர்.

 

Bus issue -School students - Collector

 



அதில் காஞ்சிகோவில் கிராமத்தையடுத்த தங்கமேடு காலனியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி சீருடையில் அவர்களது பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "நாங்கள் காஞ்சி கோயில் அருகே உள்ள தங்கமேடு காலனி பகுதியில் குடியிருந்து வருகிறோம். அங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கவுந்தப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் சாலைகள் இருந்தும் இதுவரை பஸ் வசதி இல்லை. இதனால் குழந்தைகள் தினமும் பள்ளி செல்வதற்காக இரண்டரை கிலோமீட்டர் நடந்து சென்று அய்யன் வலசு பிரிவு என்ற இடத்திற்குப் போய்  பஸ்ஸில் ஏறி கவுந்தப்பாடி செல்கின்றனர்.

 



எங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறை தான்  மினி பஸ்ஸும் ஒரு அரசு பஸ்சஸூம் வருகிறது. அதனால் எங்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. பேருந்து இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதே போன்று கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என எல்லோரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தினமும் காலை மற்றும் மாலையில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்ட கலெக்டர் கதிரவன் உடனடியாக போக்குவரத்து துறை  அதிகாரியை அழைத்து உடனே இவர்கள் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.  அதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரி மாணவர்களின் பெற்றோர்களிடம் விவரங்களை பெற்றதோடு  நீங்கள் சொல்லும் பகுதியில் பஸ் வசதி செய்து தரப்படும் என்று உறுதி கூறினார். இதையடுத்து  மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கலெக்டர் கதிரவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டிற்கு சென்றனர். 


  

சார்ந்த செய்திகள்

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

திருச்சியில் பரிதாபம்; 10 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Class 10 student passed away in Trichy

திருச்சி ஜாபர்ஷா தெரு, கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா(14). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு நிமோனியா காய்ச்சல் வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குணமாகி வந்த பிறகு அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று எருக்கன் செடியை சாப்பிட்டுள்ளார். இதனால் கால் வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து ஸ்வேதா ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஸ்வேதா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.