இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாககூறப்படும் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் தற்கொலை செய்துகொண்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகஇரண்டு அணியாக பிரிந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியிருந்த பொழுது அந்த சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தோடுதினகரனை கைதும்செய்திருந்தார்கள். அதேவழக்கில்சுகேஷ் சந்திரசேகர்என்கிற நபரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பாகஅமலாக்கத்துறை தனியாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், டிடிவி.தினகரன் குறித்து சில தகவல்களைவிசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த 8 ஆம் தேதி டிடிவி.தினகரனை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை திருவேற்காட்டைசேர்ந்த கோபிநாத் (31) என்ற வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகபோலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த இரட்டை இலை வழக்கு தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி போலீசார் வழக்கறிஞர் கோபிநாத்வீட்டில் சோதனை நடத்தியிருந்தனர்.
இந்த வழக்கில் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய கும்பலிடம் இருந்து சுகேஷ் சந்திரசேகருக்கு சில கோடிகள் பணம் கொடுக்கப்பட்டதாகடெல்லியில் வழக்கறிஞர் கோபிநாத் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்த வாக்குமூலம் டிடிவி.தினகரனுக்கு எதிரான வாக்கு மூலமாவும், அந்த வழக்கின் திருப்பு முனையாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பட்டநிலையில், வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபிநாத் பயன்படுத்திய செல்போனை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.