Advertisment

அரசியல்வாதியைப் போல் வாக்கு சேகரிக்கும் சிறுவன்..!

Boy collecting votes like a politician

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் போட்டியிடுகிறார்.

ஒருபுறம் திமுக வேட்பாளரான செந்தில்குமார், தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மற்றொருபுறம் அவருக்கு ஆதரவாக அவரது மனைவி முனைவர் அருள்மெர்சியும் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் செந்தில்குமாரை ஜெயிக்க வைப்பதற்காக அவரது பிள்ளைகளான ஆதவன் மற்றும் ஓவிய மீனாட்சி ஆகியோரும் வீடு வீடாகச் சென்று மழலை குரலில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அரசியல்வாதிகளைப் போல் வேஷ்டி சட்டை அணிந்து, ஆதவன் வாக்கு சேகரிப்பதைப் பார்த்து தொகுதி மக்கள் அசந்து போயுள்ளனர். வாக்கு சேகரிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுப்போட்டுக்கொண்டு அந்தச் சிறுவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திவருகிறது.

constituency I.P.SENTHILKUMAR
இதையும் படியுங்கள்
Subscribe