Skip to main content

அரசியல்வாதியைப் போல் வாக்கு சேகரிக்கும் சிறுவன்..!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

Boy collecting votes like a politician

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு  எதிராக அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் போட்டியிடுகிறார்.

 

ஒருபுறம் திமுக வேட்பாளரான செந்தில்குமார், தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மற்றொருபுறம் அவருக்கு ஆதரவாக அவரது மனைவி முனைவர் அருள்மெர்சியும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் செந்தில்குமாரை  ஜெயிக்க வைப்பதற்காக அவரது பிள்ளைகளான ஆதவன் மற்றும் ஓவிய மீனாட்சி ஆகியோரும் வீடு வீடாகச் சென்று மழலை குரலில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

 

அரசியல்வாதிகளைப் போல் வேஷ்டி சட்டை அணிந்து, ஆதவன் வாக்கு சேகரிப்பதைப் பார்த்து தொகுதி மக்கள் அசந்து போயுள்ளனர். வாக்கு சேகரிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுப்போட்டுக்கொண்டு அந்தச் சிறுவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, திமுக  தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி-ஐந்து ஒன்றியமாக பிரிக்கப்பட்ட தொகுதி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
End of DMK party tussle- Constituency divided into five unions

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதில் மூன்றாவது முறையாக தேன்மொழி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஆளுங்கட்சியான அந்தப்பகுதி திமுகவினர் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வம் கட்டாமல் தங்களுக்குள் கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டு கட்சியை வளர்க்கவும் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அறிவாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த நிலக்கோட்டை தொகுதியில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை என இரண்டு யூனியன்கள் உள்ள. இந்த யூனியன்களுக்குட்பட்ட பகுதிகளை 5 ஒன்றியங்களாக பிரித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு வத்தலக்குண்டு வடக்கு, வத்தலக்குண்டு தெற்கு என புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் அடங்கிய வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.பி. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 9 ஊராட்சிகள் அடங்கிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றியத்திற்கு கனிக்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

End of DMK party tussle- Constituency divided into five unions

இதேபோல் நிலக்கோட்டை யூனியனை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை அடங்கிய பகுதிக்கு மணிகண்டன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் 7 ஊராட்சி ஒன்றியங்களாக சுருக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளராக சௌந்தரபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு நீண்ட நாள் போராடி வந்த கரிகால பாண்டியனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு ஒன்றியம் என ஒரு கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கரிகால பாண்டியன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக அதிக அளவில் வாக்குகளை பெற்றுத் தர வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் திமுக கொடி பறக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றியங்களை பிரித்து புது வியூகத்தை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்க ஆளும் கட்சியான திமுக தயாராகி வருகிறது.

Next Story

தென்காசியில் வெற்றி பெற்றது யார்? வெளியான மறுவாக்கு எண்ணிக்கை முடிவு

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Who won Tenkasi; Re-vote count results released

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டார். அதில் பழனி நாடார், செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததுள்ளது. எனவே பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது.

 

அதன்படி தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மறு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. தேர்தல் அலுவலராக தென்காசி உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டார். காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்ற நிலையில் 20 நிமிடம் தாமதமாகக் காலை 10.20 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட்டார். இந்நிலையில் மீண்டும் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.