BJP's stand in Erode East by-election - Annamalai

Advertisment

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையம் வருகை புரிந்தார். அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை அளித்த பதில் பின்வருமாறு...

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் தெளிவுபடுத்துகிறோம். தமிழ்நாட்டில் சிலை கலாச்சாரம் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது. அரசு பணத்தை செலவு செய்துபொது மக்கள் வரிப்பணத்தில்13 கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சிலை அமைக்க கூடாது. விரும்பினால் அவர்கள் தங்களது சொந்த இடத்தில் சிலை வைத்துக் கொள்ளலாம்.நடப்பு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.