ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க முயற்சி செய்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்துக்கு இடம் கிடைக்க முயற்சித்தார். இந்த மோதலில் மத்திய அமைச்சரவையில் யாருக்கு இடம் என்பது முடிவாகாமல் இருந்து வருகிறது. மே 30ஆம் தேதி பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெல்லியிலேயே இருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் ஒரு புதிய பார்முலாவை பாஜக சொன்னதாம். அதன்படி டெல்லியில் இருந்து வந்த ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதனை தெரிவித்திருக்கிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக்கிடுங்கள். அதோடு சி.பி.ராதாகிருஷ்ணனையும் ராஜ்யசபா உறுப்பினராக்கிடுங்கள். அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்கள் தருவதாக பாஜக சொன்னதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பாஜக கடும் கோபத்தி உள்ளதாம்.மத்திய அமைச்சரவைடியில் இரண்டு பேருக்கு இடம் அதில் ஒன்று ரவீந்திரநாத் குமார், இன்னொன்னு வைத்திலிங்கம் என்றாலும் பாஜகவுக்கு இரண்டு ராஜ்யசபா சீட் எப்படி கொடுப்பது. இங்கு கட்சியில் தம்பிதுரை, மைத்ரேயன், கே.பி. முனுசாமி, மனோஜ்பாண்டியன் என 10க்கும் மேற்பட்டோர் பதவி கேட்டுள்ளனர். இரண்டு ராஜ்யசபா சீட் பாஜகவுக்கு, ஒன்று ஏற்கனவே பேசியப்படி பாமகவுக்கு கொடுத்துவிட்டால் அதிமுக என்ற கட்சி எதற்கு என்று கட்சியினரே கேட்பார்களே? என சீனியர்கள் பேசி வருகிறார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ராஜ்யசபா தேர்தலில் இடம் தராவிட்டால் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்கிறது பாஜக. மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை என்றால் அதிமுக உடையும் என்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இப்படி இடியாப்பச் சிக்கலில் உள்ள அதிமுக, எந்த நகர்வை மேற்கொண்டாலும் சேதமடைவது உறுதி. இந்த சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிப்பார் என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.