/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_628.jpg)
பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி வேலூர் மாவட்டகட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நிகழ்ச்சிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் கேட்டபோது, "தேர்தல் காலம் தொடங்கியுள்ளதால் பிரதமர், உள்துறை அமைச்சர், தேசியத்தலைவர் உட்பட பல மத்திய அமைச்சர்கள் மற்றும்பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வருவதற்கான திட்டமிடல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
​
பிப்ரவரி 23ஆம் தேதியில்,ஜே.பி.நட்டாவுக்கு பலமுக்கிய நிகழ்வுகள்டெல்லியில் உள்ளது. அது தற்போது திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை ஒத்திவைக்க முடியாது என்பதால் இந்தக் கட்சி நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நிச்சயம் எங்கள் தேசியத் தலைவர் வேலூர் வருவார்" என்றார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)