''மன்னிப்பு கேட்க முடியாது'' - அமைச்சருக்கு பாஜக அண்ணாமலை பதில்

 BJP's Annamalai responds to minister

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துவருகின்றார். சமீபத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜிநிர்வகிக்கும் மின்வாரியத்தில் அதிக அளவில் ஊழல் நடப்பதாகவும், நான்கு மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சி செய்வதாகவும், அது தொடர்பான ஆவணங்களை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தின் மொத்த தேவையில் 1.04 சதவீதம்தான் இந்திய அரசின் மின் சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதால் கொள்முதல் அவசியமானதாக உள்ளது.

 BJP's Annamalai responds to minister

ஆனால் அதிக அளவில் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதில் குஜராத், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிட வேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்திருந்தார். இதனால் அமைச்சர்செந்தில்பாலாஜிக்கும்பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேட்விட்டரில்பனிப்போர் நிலவிவந்தது.

இந்நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது பதிலளித்த அண்ணாமலை, ''இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் சந்திக்கத் தயார்'' எனத் தெரிவித்தார்.

Annamalai electicity senthilbalaji
இதையும் படியுங்கள்
Subscribe