சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். மேலும் ஈவெரா பற்றி அவதூறாக பேசியதற்கு ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியிருந்தார்.

bjp

Advertisment

Advertisment

இந்த நிலையில் நடிகரும் அரசியவாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ஈவெரா பற்றி அவதூறாக பேசியதற்கு ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் - கி.வீரமணி. என்ன மொத்தமா 10 பைசா வருமா⁉️இந்துக்கடவுள்களையும் சடங்குகளும் பற்றி அவதூறாக பேசிவரும் நீங்கள் கொடுக்கப்போகும் விலை உங்க டிரஸ்டுல இருப்பதை விட மிக அதிகமாக இருக்கப்போகிறது. மணி போனா பாக்கி பூஜ்யம் என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.