உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் கடந்த 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், பஞ்சாப் தவிர்த்து ஏனைய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதனை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நான்கு மாநில வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு பாஜக மீனவர் அணி சார்பில் அந்த அணி மாநிலத் தலைவர் எஸ். சதீஷ்குமார் தலைமையில், சென்னை புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியில் 300 கிலோ எடை கொண்ட மீன்களை அப்பகுதி வாழ் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
பாஜக வெற்றி கொண்டாட்டம்! மீன் வழங்கிக் கொண்டாடிய மீனவர் அணி! (படங்கள்)
Advertisment