Published on 16/03/2020 | Edited on 16/03/2020

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் நேற்று கோவை சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிபி ராதாகிருஷ்ணன், மாநில விவசாய அணியின் துணை தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் திறந்த காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
கோவை நகர மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, தலைவர் ஆகும்வரை உங்களில் ஒருவனாக சாதாரண தொண்டனாக பணியாற்றினேன். இப்போது தலைமை தொண்டனாக பணியாற்றும் வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், தேசியத் தலைவர் அமித்ஷா அவர்களும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் தாமரை மலர்வதற்கு உங்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றுவேன் என்றார்.