Advertisment

“நாங்கள் இல்லையென்றால் அதிமுக அழிந்திருக்கும்” - ஈ.பி.எஸ்ஸை சீண்டும் பாஜக

bjp talk about admk and eps

அதிமுக - பாஜக இடையே சமீபகாலமாக வார்த்தை போர் நிலவி வருகிறது. அத்தோடு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜகவினரை மேலும் கோபப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக செயல்பட்டு வருவதாக கூறி பாஜகவினர் கடும் கண்டனங்களைத்தெரிவித்தனர். ஒவ்வொரு வினைக்கும், கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என அதிமுகவை அண்ணாமலை கடுமையாகச் சாடியிருந்தார். தொடர்ந்து இரு கட்சியினரும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர்களின் உருவப் படங்களை எரித்தனர்.

Advertisment

இந்த நிலையில் நேற்று கூடிய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு பாஜகவிற்கு அதிமுகவிற்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்குள் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக தெரிவித்தது. இந்த நிலையில் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தால், கண்டிப்பாக நாங்களும் எடப்பாடி உருவ பொம்மையை எரிப்போம் என நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக பேசிய அவர், “விரைவில் எடப்பாடி உருவ பொம்மையை எரிப்போம். நாங்கள் தேசியக்கட்சி, பாஜக அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து வருகிறது. தற்போது வரை எங்கள் தலைவர்கள் யாரும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று தெரிவிக்கவில்லை. ஆனால் எங்களை வேண்டும் என்றே கூட்டணியில் இருந்து வெளியேற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுகவால்தான் பாஜக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜக மற்றும் பிரதமர் மோடியால்தான் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடிந்தது. நாங்கள் இல்லையென்றால் அதிமுக என்ற கட்சியும், ஆட்சியும் அழிந்திருக்கும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தோம். அதனால் எங்களை வெளியேற்றப் பார்க்கிறார்கள். தேர்தல்களில் தனித்து போட்டியிடும் சூழல்தான் வரும்” என்றார்.

admk Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe