இந்து மதத்திற்குஅரணாக இருப்பார் என்றால்ரஜினிக்குஉதவி செய்ய தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிதெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

bjp subramaniya swami press meet

ஆலோசனை கூட்டத்திற்கு பின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை; ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன் எனகூறியிருந்தார்.

Advertisment

bjp subramaniya swami press meet

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிரஜினிகாந்த் பற்றிய கேள்விக்குபதிலளித்து பேசுகையில்,

ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் அப்புறம் பார்ப்போம். ரஜினிகாந்த்இந்து மதத்திற்குஅரணாக இருப்பார் என்றால் அவருக்குஉதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.