Advertisment

“நாங்கள் திராவிட சித்தாந்தம் பேச விரும்பவில்லை..” - அண்ணாமலை

BJP State Leader Annamalai addressed press at Madurai

“தனிமனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக, யாருடைய பேச்சையும் ஒட்டுக் கேட்காது. ஒட்டுக் கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை வைக்கின்றனர். நாங்கள் திராவிட சித்தாந்தம் பேச விரும்பவில்லை” என்று மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டம், ஆத்திக்குளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவிற்கு நேரில் சந்தித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாநிலங்களில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்துவருகிறேன். நிச்சயமாக அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வேன். ஊரடங்கு தளர்வு வந்தால் உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தவுள்ளோம். சித்தாந்த அடிப்படையிலான கட்சிதான் பாஜக.

Advertisment

திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம். அப்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். மோடியின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். இதன் காரணமாக பாஜகவிற்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்கள் ஒட்டுக்கேட்பு என்ற புகார் மீது மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். வாட்ஸ் அப் நிறிவனம் பெகாசஸ் மூலமாக கிராக் பண்ண முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

தனிமனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக, யாருடைய பேச்சையும் ஒட்டுக் கேட்காது. ஒட்டுக் கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை வைக்கின்றனர். பெகாசஸ் ஸ்பைவேரிடம் நம்பர் இருப்பதால் ஒட்டுக் கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்திதான் ஒட்டுக் கேட்பு விவகாரம். தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கட்சி பாஜக. ஒட்டுகேட்பு புகார் என்பது பொய் செய்தி.

பாஜக, கூட்டாக பணி செய்துவருகிறோம். வேல் யாத்திரை மக்களின் வேள்விக்காக நடைபெற்றது. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதுதான் பாஜகவின் யாத்திரைகள். திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கின்றது. நாங்கள் திராவிட சித்தாந்தம் பேச விரும்பவில்லை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளனர். திமுக, தேர்தலில் பொய்யான சித்தாந்தத்தைக் கூறி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

madurai Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe