BJP senior leader Ila.Ganesan appointed governor

Advertisment

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானஇல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்பிறப்பித்துள்ளார்.

அண்மையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மணிப்பூர் ஆளுனராக தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும்நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.