BJP Resolution Sethu Samudra Project should be implemented without damage  Ram Bridge

Advertisment

கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,பாஜகவின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில்,ஜி 20 மாநாட்டில் தலைமையேற்றுள்ளபிரதமர் மோடிக்கு வாழ்த்தும்பாராட்டும், சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நடந்தவற்றுக்குகண்டனம். பெண் காவலருக்கேபாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகதிமுக அரசுக்கு கண்டனம். ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது சமுத்திரத் திட்டத்தைஅமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14 தேதி திருச்செந்தூரில்நடைப் பயணத்தை தொடங்க உள்ளதாகவும்அறிவித்துள்ளார்.