தமிழ்நாட்டில் ரூ. 31,400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பாதுகாப்பின் காரணமாக இன்று சென்னையில் ட்ரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவினர் மோடியை வரவேற்கும் விதமாக பட்டினம்பாக்கத்தில் வரவேற்பு பலூன் பறக்கவிட தயாரானார்கள். ஆனால், தடை விதிக்கப்பட்டிருப்பதால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு காவல்துறையினரிடம் பாஜகவினர் பலூன்களை பறக்க விடாமல் கையில் வைத்துக் கொள்கிறோம் என கோரிக்கைவைத்தனர். அதற்கு காவல்துறையினர் இரண்டு நிமிடம் மட்டும் அவ்வாறு கையில் வைத்துக்கொள்ள அனுமதி அளித்தனர்.
மோடிக்கு வரவேற்பு கொடுக்க தயாரான பாஜக! தடை விதித்த காவல்துறை!
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-3_30.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-2_42.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-1_44.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th_46.jpg)