மோடியின் பா.ஜ.க. அரசு கொண்டுவரும் அனைத்து சட்ட திட்டத்துக்கும் எடப்பாடி அரசு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த விசுவாசத்துக்கு உரிய பரிசை மோடி அரசும் அ.தி.மு.க.வுக்குத் தரப்போவதாக சொல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் முஸ்லிம் மக்களுடன் மற்ற மதத்தினரும் இணைந்து போராடும் நிலையிலும் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. அதனால் விரைவில் விரிவாக்கப்பட இருக்கும் மோடி அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகளைத் தருவதாக டெல்லி தரப்பு எடப்பாடிக்குத் தகவல் கொடுத்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. அதில் ஒரு பதவியை ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொல்லப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அதனால் மனதைத் தேற்றிக் கொண்ட எடப்பாடி, ஓ.பி.எஸ்.சிடம், அண்ணே, நம்ம பையனுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று டெல்லியிடம் கேட்டு ஓ.கே. வாங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

Advertisment

admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் இன்னொரு அமைச்சர் நாற்காலியை சீனியரான வைத்திலிங்கம் எம்.பி.க்குக் கொடுக்கலாம் என்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாக சொல்கின்றனர். வரும் 26-ந் தேதி தஞ்சை மஹாராஜா மஹாலில் நடக்க இருக்கும் வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவுக்கு இருவருமாக சென்று, அவருக்கு இந்தத் தகவலையே கிஃப்டாக கொடுக்கபோவதாக சொல்கின்றனர். இதற்கிடையில் பா.ம.க. அன்புமணி தரப்பும், அமைச்சர் பதவிக்காக டெல்லியில் பா.ஜ.க. தரப்பை கிரிவலம் வந்துகொண்டு இருப்பதாக சொல்கின்றனர்.