Advertisment

"நடிகர்களுக்குக் கோயில் கட்டும் கும்பலுக்கு அவ்வளவு தான் அறிவு..." ஜோதிகாவை கடுமையாக விமர்சித்த பாஜகவின் காயத்ரி ரகுராம்!

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், "பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. அதை நன்கு பராமரித்து வருகிறார்கள். அதேபோல் பல்வேறு கோயில்களுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்" என்று நடிகை ஜோதிகா கூறினார். ஜோதிகாவின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், சில தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது.

Advertisment

bjp

இந்த நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான பாஜகவின் காயத்ரி ரகுராம், நடிகை ஜோதிகா பேசியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நடிகர்களுக்குக் கோயில் கட்டும் கும்பலுக்கு அவ்வளவு தான் அறிவு என்றும், நடிகர்களுக்காக கோயில்களைக் கட்டியவர்கள் ஒருபோதும் சனாதனத்தர்மத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் மூளை அப்படி என்று கூறியுள்ளார். மேலும் திமுக, திக, நாம் தமிழர் கட்சி, விசிக கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர். ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துபவர்கள் வெட்கக்கேடானவர்கள் என்றும் கூறியுள்ளார். அதோடு நடிகை ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும், இந்துக்கள் சமத்துவத்திற்குத் தயாராக உள்ளனர். மற்ற மதம் சமத்துவத்திற்குத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. அவர் பேசும் போது தேவாலயம், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். திமுகவும் மற்ற பயனற்ற கட்சிகளும்பிறமதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார். பாஜகவின் காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

gayathriraguram politics Speech jothika
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe