bjp

Advertisment

மறைந்த தமிழகத்தின் முன்னாள்முதல்வரும்தி.மு.க.வின் முன்னாள் தலைவருமானமுத்தமிழறிஞர்கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம்தேதியை தமிழகம் முழுவதும் விமர்சையாகக்கொண்டாடுவார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். இந்த வருடம், கரோனா பாதிப்பில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தி.மு.க.

Advertisment

இந்த நிலையில் நடிகையும், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்ந்துள்ளார். அவர் சொற்களாலும், பேச்சுகளாலும் புத்திசாலித்தனமாக இருந்தார். அவரது சொற்களையும் பேச்சுகளையும் மக்கள் உள்வாங்கினர். இன்று இருக்கும் தி.மு.க.வினருக்கு அப்பாற்பட்டவர், அவரைப் போல பேச தி.மு.க.வில் யாரும் இல்லை. தி.மு.க.வில் அவர் இடத்தை இனி யாராலும் மாற்ற முடியாது என்பது உண்மை என்று கூறியுள்ளார்.