bjp

தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் வி.பி.துரைசாமி. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது,எல்.முருகன் இதற்கு முன்பு வகித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை துரைசாமிக்கு வாங்கித் தருவதாக உறுதியளித்த முருகன், அது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டாவிடம் பேசியிருப்பதாகச் சொல்கின்றனர்.

Advertisment

Advertisment

துரைசாமிக்கு அந்தப் பதவி கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு ரெண்டு அசைன்மெண்ட்டுகள் பா.ஜ.க. கொடுக்கப்போவதாகச் சொல்கின்றனர். அதாவது முரசொலி தொடர்பான பஞ்சமி நில விவகாரத்தையும், கோட்டையில் தலைமைச் செயலாளருடனான சந்திப்பின்போது தாழ்த்தப்பட்டவர்களைப் போல நடத்தப்பட்டோம் என்று கூறி, சர்ச்சையில் சிக்கிய தயாநிதி மாறன் விவகாரத்தையும் தீவிரமாக அவர் கையிலெடுத்து, அதிரடி கிளப்பவேண்டும் என்று சொல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.