Advertisment

ஊரடங்கு நேரத்திலும் உற்சாகமாக இருக்கும் பாஜகவினர்... தடை போடும் பிரதமர் மோடி? வெளிவந்த காரணம்!

bjp

நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த ஊரடங்கு நேரத்திலும் பா.ஜ.க. தரப்பில் ஒருவித உற்சாகம் இருந்து வருகிறது. இது பற்றி விசாரித்தபோது, 'மோடியின் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சி, வரும் 30-ந் தேதியோடு ஒரு வருடத்தை கடக்க இருக்கிறது. இதைபிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்த மோடி, கரோனாவால், பெரிதாக கொண்டாட வேண்டாம் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

ஆனால் மாநில பா.ஜ.க தலைவர்கள் பலரும், இந்த ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் ஸ்லோகத்தை உருவாக்கி, அதன் மூலம் விழாவை முன்னெடுக்கலாம் என்று கட்சியின் அகில இந்தியதலைவர் நட்டாவிடம் கூறிவருகின்றனர். ஆனால் மோடியோ, இந்த நேரத்தில் இதைசெய்தால், மக்களின் அதிருப்திதான் அதிகமாகும் என்று மறுத்திருக்கிறார். இருந்தும் பா.ஜ.க.புள்ளிகள் தங்கள் கொண்டாட்ட மனநிலையைகைவிட்டதாகத் தெரியவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர்.

jp nadda Leader modi politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe