bjp

Advertisment

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 2021-ல் நடக்கவேண்டிய தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 6 மாநில தேர்தல்களையும் 6 மாதத்திற்கு தள்ளிவைத்து விட்டு, இங்கெல்லாம் கவர்னர் ஆட்சி மூலம் மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு என்று அதிரடியில் இறங்கி, அதன்மூலம் தனக்கு சாதகமான சூழலை உருவாக்கிய பிறகு, தேர்தலை நடத்தலாம் என்று பா.ஜ.க. தலைமை ஆலோச்சித்து கொண்டு இருப்பதாக சொல்கின்றனர். அதோடு, கரோனா நெருக்கடியால், தேர்தலை நடத்தும் நிதி நிலைமை இல்லை என்று அதற்கு காரணம் சொல்லிக்கொள்ளலாம் என்றும் பாஜக கணக்குப் போடுவதாக சொல்லப்படுகிறது.