1985 ஆம் ஆண்டு இந்திரா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்களுக்கு பாதுகாப்பளிக்க இந்த பாதுகாப்புப்படை உருவாக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்காக மட்டும் 3 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் உள்ளனர். இதனையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மன்மோகன் சிங்கிற்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு தொடரும் என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/905.jpg)
இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன் படி 22 ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஸ்டாலினின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாததால் அவரது பாதுகாப்பைத் திரும்பப் பெறவேண்டும் என தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு தகவல் போனதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் பாதுகாப்பு படை குறித்து மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் கொடுக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது. இது பற்றி வெளிவரும் வதந்திகளை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாக கூறுகின்றனர்.
Follow Us