Advertisment

நள்ளிரவில் பாஜகவினர் யாகம்!

இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் வரவேண்டும் என நாகப்பட்டினத்தில் பாஜகவினர் சிலர் நள்ளிரவு யாகபூஜை நடத்தினர்.

Advertisment

bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாகப்பட்டினம் கடை வீதியில் புகழ்பெற்ற நீலாட்சி அம்மன் கோயில் உள்ளது, அதற்கு சொந்தமான குண்றிக்குளக்கரையில் உள்ள கால சம்கார பைரவர் கோயில் இருக்கிறது. அங்கு காசிக்கு அடுத்தபடி பைரவருக்கு நாய் வாகனத்திற்கு பதிலாக சிங்கவாகனம் இங்கு தான் இருக்கிறது. அங்கு அமாவாசை நள்ளிரவில் காலசம்ஹார யாகம் நடத்தினால், எதிரி வீழ்ந்துபோவார், என்றும் வெற்றி எளிதாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Advertisment

அந்தவகையில் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த பாஜகவினர் சிலர் அமாவாசையான நேற்று நள்ளிரவு சம்ஹார பூஜை யாகத்தை நடத்தினர். யாகத்தின்போது நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும், பாஜக ஆட்சி மீண்டும் மலர வேண்டும், என்பன உள்ளிட்ட மந்திரங்களை சொல்லி யாகம் நடத்தி முடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe