"பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது" - முதல்வர் ரங்கசாமி

bjp nr congress alliance very very strong said by cm rangasamy 

புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் சட்ட புத்தகங்களின் சென்னை கிளை நிறுவனத்தைபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "புதுச்சேரியில் 15 ஆம் தேதி முதல் கடல் வழி சரக்கு போக்குவரத்து துவங்க இருக்கிறது. இதே போல் பயணிகள் கப்பல் போக்குவரத்தும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் போடப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைநாராயணசாமி வாங்கி இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், அவர் கருப்பு சட்டை போட்டு போராடியும் பெறவில்லை. நிச்சயமாக மாநில அந்தஸ்து பெறப்படும். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள், “பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி விவாகரத்து ஆகிவிட்டதாக நாராயணசாமி கூறுகிறாரே” என்று கேட்டதற்கு, "பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் நல்ல திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்படுகிறது. பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது" என்று கூறினார்.

Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe