Advertisment

உங்களுக்கே தெரிகிறதே.. ? கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே... மதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் எச்.ராஜா...

hhh

டெல்லியிலும் பா.ஜ.க ராஜாதான் தமிழகத்திலும் பா.ஜ.க ராஜாதான். இந்தியாவில் இரண்டு ஆன்மீக கட்சிகள் இருந்து ஒரே கொள்கையின் கீழ் கூட்டணி வைத்தால் தவறில்லை. ரஜினி இணைவது அவரது விருப்பம். சசிகலா கட்சியில் கூட்டணி வைப்பது என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம் அவர் அத்தையாக தான் இருப்பார். சித்தப்பா ஆக முடியாது. எனவே கூட்டணிக்கு பேச்சே இல்லை என பா.ஜ.க மாநிலச் செயலர் ஹெச்.ராஜா மதுரையில் பேட்டி அளித்தார்.

Advertisment

மதுரை மாநகர் வடக்கு தொகுதி, மதுரை மத்திய தொகுதி பூத் கமிட்டி கூட்டம், கட்சியினரிடையே செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்இன்று (04.09.2020) மாலை பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா பேசியதாவது:தமிழகத்தில் 44 ஆயிரம் கோவில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக வரும். தமிழக கோவில்களில் ஆண்டுதோறும் தமிழக அரசு தணிக்கை அதிகாரிகளைக் கொண்டு தணிக்கை செய்ய உட்படுத்த வேண்டும்.

இரண்டு ஆன்மீக கட்சிகள் ஒரே கொள்கையுடன் இருந்தால் கூட்டணி வைப்பதில் தவறில்லை. ரஜினி ஆன்மீக அரசியல் எங்களுடன் இணைந்து செயல்படலாம். அல்லது,அவருடைய கொள்கை எங்கள் பா.ஜ.கவுடன் ஒத்து போகலாம். டெல்லியில் மட்டும் பா.ஜ.க ராஜா இல்லை. தமிழகத்திலும்பா.ஜ.க ராஜாதான்.

சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது, இம்மாதம் வருகிறார் என்பது உங்களுக்கே தெரிகிறதே என்றார். கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே என்றார். 3 தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுமா என்ற கேள்விக்கு,இது குறித்து பா.ஜ.க மாநில குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து அறிக்கை வெளியிடுவோம் என்றார்.

சசிகலா வந்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி தொடருமா? பா.ஜ.க நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம். அப்பாவுக்கு அண்ணனாக இருந்தால் பெரியப்பா என்போம். தம்பியாக இருந்தால் சித்தப்பா,தங்கையாக இருந்தால் அத்தை மட்டுமே.அத்தைக்கு மீசை முளைத்தால் பா.ஜ.க ஆதரவு தரும் என்றார்.

h.raja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe