Advertisment

"காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானின் குரலை எதிரொலிக்கிறார்கள்" - ஜே.பி.நட்டா

bjp national president jp nadda press statement

நாடாளுமன்றத்தின்பட்ஜெட்கூட்டத்தொடரின்இரண்டாம் அமர்வுதுவங்கியதிலிருந்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்தராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும்,அதானிவிவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்றுஎதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும்வருகின்றனர். இதனால் தொடர்ந்து 5 நாட்களாக நாடாளுமன்றத்தின்இரு அவைகளும்முடங்கி உள்ளன.

Advertisment

இந்நிலையில் பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டாவெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா மோடி தலைமையில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அப்படி இருக்கையில் வெளிநாட்டில் ராகுல் காந்தி இந்தியாவைப் பற்றிஇழிவாகப்பேசி உள்ளார். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று அமெரிக்கஐரோப்பாவின் தலையீட்டைக் கோருவது போன்ற வெட்கக்கேடான செயல் வேறு எதுவும் இல்லை. நமது நாட்டை ஆட்சி செய்தநாட்டிலிருந்துவெளிநாடுகளின்இத்தகையதலையீட்டைக்கோருவதுதுரதிஷ்டமான செயல் ஆகும். ராகுல் காந்தி பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் ஆகும். மக்களால் நிராகரிக்கப்பட்டதால்இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டத்தின்நிரந்தர அங்கமாக ராகுல் காந்தி மாறிவிட்டார்.வெளிநாட்டுச்சதிகாரர்களுடன் அவர் கைகோர்த்துள்ளார். சுதந்திர இந்தியாவில்எந்த தலைவர்களும் இதற்கு முன்பு இதுபோன்ற செயல்கள் செய்ததில்லை. இதற்குராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Advertisment

இந்திய விரோத சக்திகளுக்குஇந்தியாவில் வலிமையான அரசு ஆட்சி செய்தாலேபிரச்சனை தான். பல்வேறு நிர்பந்தத்தின் அடிப்படையில்செயல்படும் பலவீனமான கூட்டணிஆட்சியைத்தான் இவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் தாங்கள் நினைக்கும்வகையில்இந்தியாவைப்பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். அத்தகைய சதியின் ஒருஅங்கமாககாங்கிரஸ் கட்சியினரும், இடதுசாரிகளும் மாறிவிட்டனர். இந்திய விரோதியான ஜார்ஜ்சோராசின்குரலில் ராகுல் பேசி வருகிறார். தேச விரோத காங்கிரஸ்தலைவர்கள் பாகிஸ்தானின்குரலைஎதிரொலிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe