Advertisment

பாஜக எனது கட்சி... ஆனால், லாலு எனக்கு குடும்பம்! - சத்ருகன் சின்கா

பாஜக எனது கட்சியாக இருக்கலாம் ஆனால், லாலு எனக்கு குடும்பம் போன்றவர் என பா.ஜ.க. மூத்த தலைவர் சத்ருகன் சின்கா பேசியுள்ளார்.

Advertisment

Lalu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்கா, தொடர்ந்து மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அதேசமயம், லாலு பிரசாத் யாதவ் எனது நெருங்கிய நண்பர் என்று அவர் பல இடங்களில் வெளிப்படையாக பேசிவந்தார். இதனால், அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி லாலு பிரசாத் யாதவ்வின் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்துவிடுவார் என்று பா.ஜ.க.வினர் பேசிவருகின்றனர். ஆனால், அதை சத்ருகன் சின்கா திட்டவட்டமாக மறுத்துவருகிறார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ரம்ஜான் இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட சத்ருகன் சின்கா லாலு, ராப்ரி தேவி, தேஜஸ்வி, தேஜ், மிஸா ஆகிய அனைவரும் என் குடும்ப நண்பர்கள். நான் அவர்களது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. எனது கட்சியாக இருந்தாலும், இவர்கள் எல்லோரும் எனக்கு குடும்பம் போன்றவர்கள் என பேசினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அதேபோல், லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ், சத்ருகன் சின்கா அரசியலில் மிகச்சிறந்த பங்காற்றி பாட்னா பாபு என்ற பெயரைப் பெற்றவர். ஆனால், அவரை பா.ஜ.க. முறையாக கவுரவிப்பதில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.

Tejashwi Yadhav RJD Bihar Lalu prasad yadhav Sathrugan sinha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe