Advertisment

“பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மதுபான மாஃபியாக்களின் பிடியில் உள்ளனர்” - பாஜக  மூத்த தலைவர் குற்றச்சாட்டு

“BJP MLAs are in the pockets of liquor mafias,” BJP senior alleges.

Advertisment

பாஜக ஆட்சியில் எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் மதுபான மாபியாக்களின் பிடியில் உள்ளனர் என பாஜக முன்னாள் முதல்வர் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அடுத்த பெதுல் நகர் வந்த பாஜக முன்னாள் முதல்வர் உமா பாரதி அங்கு செய்தியாளர்களைச்சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மதுவை குடிக்க வேண்டாம். அதற்கு மாற்றாக மக்கள் பசுவின் பாலை குடிக்க வேண்டும். அனைத்து மதுபானக் கடைகளையும் மூடிவிட்டு மாட்டுக் கொட்டகைகளைக் கட்ட வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் இயற்கை விவசாயம் வேகமாக அழிந்து வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும்.

பொது இடங்களுக்கு அருகே மதுபானக்கடைகள் இருக்கக்கூடாது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மதுபான மாஃபியாக்களின் பிடியில் உள்ளனர். தற்போதைய முதல்வர் விரைவில் புதிய மதுக்கொள்கையை அமல்படுத்துவார் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

MadhyaPradesh
இதையும் படியுங்கள்
Subscribe