தேர்தலில் யார் வென்றாலும் பணநாயகமே வென்றதாகக் கருதப்படும் - பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி

bjp mla Saraswathi talk about erode east byelection

தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ஈரோடு சி.எஸ்.ஐ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி தனதுவாக்கினைச் செலுத்தினார். அதன் பிறகு பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் வாங்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் அனைவரும் மாற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Voting
இதையும் படியுங்கள்
Subscribe