Skip to main content

மஹாராஷ்டிராவில் பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்க ரெடியான எம்.எல்.ஏ.க்கள்... அதிர்ச்சியில் பாஜக!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

மகாராஷ்டிராவில் அகில இந்திய இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுக்கு, மாநில இந்துத்துவாக் கட்சியான சிவசேனா அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர்.  மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வோடு கைகோத்திருந்த சிவசேனா, அங்கு ஏற்பட்ட குழப்படியான அரசியல் நிலவரங்களால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்திருக்கு என்கின்றனர். மஹாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றினால் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தேவைப்பட்டது. ஆனால் சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பாஜக தள்ளப்பட்டது. இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு கட்சி தாவ ஒரு சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில மாநிலங்களவை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆட்சிக்கு வர முடியாத சூழலால்  பாஜக எம்.எல்.ஏ.க்கள் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.   
 

bjp



மேலும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்கள் சொத்துக்களை பாதுகாக்கவே பா.ஜ.க-வில் இணைந்து பல கோடி செலவு செய்து எம்.எல்.ஏ-க்கள் ஆனவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆளும் சிவசேனா தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு என்று கட்சி தாவ முடிவெடுத்துள்ளனர். பாஜகவின் எம்.எல்.ஏ.க்களின் சிலரின் முடிவால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அரசுக்கு எதிராக வாக்களிக்க வைத்து பின்பு பாஜக கட்சியில் இணைத்து இடைத்தேர்தலில் பாஜக சின்னத்தில் போட்டியிட வைத்தது போல் மஹாராஷ்டிராவிலும் திட்டம் போட்டு வருகிறது பாஜக. ஆனால் தற்போது பாஜக திட்டத்தை சிவசேனா கையில் எடுத்து பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகி வருவதாக கூறுகின்றனர். மேலும் அமித்ஷா வழக்குகளையும் தூசி தட்டி வருவதாகவும் சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலில் போட்டியிடவில்லை” - காங்கிரஸ் வேட்பாளர் திடீர் முடிவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு தனது உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், வரும் மே 7ஆம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை கடந்த 12ஆம் தேதி அன்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹன் குப்தா, அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தது. 

Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

தேர்தல் தேதி நெருங்கும் இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரோஹன் குப்தா அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மோசமான உடல்நிலை காரணமாக, எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அகமதாபாத் கிழக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக நான், வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். கட்சியால் பரிந்துரைக்கப்படும் புதிய வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார். ரோஹன் குப்தா போட்டியிடுவதாக இருந்த அகமதாபாத் தொகுதியில் தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஹஸ்முக் பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தில் உள்ள  26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.