பசுவுக்கு உணவளித்து வாக்கு சேகரிப்பை ஆரம்பித்த பாஜக (படங்கள்)

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை 63வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று புதுப்பேட்டை பகுதியில் பசுக்களுக்கு உணவு அளித்த பின்பு, அவர்களது கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

local body election
இதையும் படியுங்கள்
Subscribe