Advertisment

ஓபிஎஸ் உடன் பாஜக அண்ணாமலை சந்திப்பு!

ADMK

முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஒற்றைத் தலைமை குறித்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல்கூட்டமானது நடைபெற்றது. அதேபோல் ஓபிஎஸ்ஸால் பரிந்துரைக்கப்பட்ட 23 தீர்மானங்களில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸும் பாராமுகமாகவே நடத்தப்பட்டார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

Advertisment

நடைபெற இருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு கோரி இந்த சந்திப்பு நடைபெற்றது. அதேபோல் முன்னதாகஎடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பாஜக அண்ணாமலை ஆதரவு கோரியுள்ளார்.

Advertisment

'

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe