Advertisment

அடிதடியில் முடிந்த பாஜக கூட்டம்; தங்களுக்குள்ளேயே தாக்கிக் கொண்ட பாஜகவினரால் பரபரப்பு

The BJP meeting ended at the grassroots level; The agitation was caused by the BJP who attacked within themselves

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவினர்ஒருவரை ஒருவர் கடுமையாகத்தாக்கிக் கொண்டனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பாஜக தலைவர் அருண் தலைமையில் நடைபெற்றது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவராக அருண் கடந்த சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை மாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் மாவட்ட தலைவரின் ஆதரவாளருக்கும் மாவட்ட தலைவரானஅருண் ஆதரவாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாற இருதரப்பினரும் கடுமையாகத்தாக்கிக் கொண்டனர்.

அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து ஒருவர் மீதுஒருவர் வீசி எறிந்தனர். நெடுநேரம் நீடித்த இந்தத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர். நிர்வாகிகள் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். இத்தாக்குதல் சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe