BJP logo and gifts worth around 10 lakhs were confiscated

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பாஜக மற்றும் புதிய நீதி கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்து கொண்டு இருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தேர்தல் பறக்கும் படைக்கு கிடைத்த தகவலின் பேரில் அலுவலர் மணிராஜன் தலைமையிலான குழு அங்கு விரைந்து சென்றது.

 BJP logo and gifts worth around 10 lakhs were confiscated

அதிகாரிகளைப் பார்த்ததும் ஒரு குழு தப்பி சென்றது. அவர்கள் விட்டுச்சென்ற மூட்டையில் பாஜக வேட்பாளர் ஏ.சி சண்முகம் மற்றும் தாமரைச் சின்னம், பிரதமர் உருவம் அச்சிடப்பட்டஆயிரம் டிஷர்ட், ஆயிரம் விசிறி,1800 பேட்ஜ், சர்ட், சால்வை, புடவை மற்றும் பத்தாயிரம் துண்டு பிரசுரங்கள் என 19 பண்டல்களில் இருந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் பெலிப்ஸ்ராஜிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.