“சசிகலா வந்த பிறகே தெரியும்..” - எல்.முருகன் 

BJP L.Murugan about sasikala press meet madurai

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தேசியக் கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை கூட்டணி குறித்து பேசுவது, பிரச்சாரம் என அதன் தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுதேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார். அதேபோல், 2 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, இன்று (30.01.2021) மதுரை வந்துள்ளார். இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நட்டா கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்ட நிகழ்விற்கான முன்னேற்பாட்டு பணிகளை நேற்று மாநில தலைவர் முருகன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முருகன், ‘‘சட்டமன்றத் தேர்தலுக்காக மதுரையில் பிரச்சாரம் துவங்கி, தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்டகூட்டணி, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு என்பது, அவர் வந்த பின்னர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும்’’ என்றார்.

பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முருகன், “வேளாண் சட்டத்தை முழுமையாக படித்தவர்கள் ஆதரிக்கின்றனர். படிக்காதவர்களே ஏற்க மறுக்கின்றனர். அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே கூட்டணி குறித்து கூற முடியும்’’ என்றார்.

l murugan sasikala
இதையும் படியுங்கள்
Subscribe