ADVERTISEMENT

இங்கெல்லாம் வைரஸ் வராதா... நடிகர் விஜய், விஜய் சேதுபதி பேசியது குறித்தும் பாஜகவின் எஸ்.வி.சேகர் ட்வீட்!

10:50 AM Mar 17, 2020 | Anonymous (not verified)

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

ADVERTISEMENT



ADVERTISEMENT



மேலும் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், அனைத்தையும் மார்ச் 31 வரை மூட முடிவெடுத்துள்ள தமிழக அரசு, திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளைத் தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம், சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், "வைரசுக்கு பயந்து ஆலயத்தை மூடுறாங்க, பள்ளிக் கூடத்தை மூடுறாங்க, டாஸ்மாக்க ஏன் மூட முடியவில்லை அங்க நோய்ப் பரவாத ஆஃபீசர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி பேசியது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " ஒரு கூட்டம். இரு எதிர்க் கருத்துகள். மக்களுக்கு எது தேவையோ அதைத் தான் சட்டமாக்க வேண்டுமே தவிர. சட்டம் உருவாக்கிஅதற்குள் மக்களை அடைக்கக் கூடாது.- விஜய் என்றும், மதத்தைச் சொல்லி மனிதனைப் பிரிக்கும் முயற்சி நடக்குது. கொரோனாவை விட கொடிய வைரஸ் அதுகிட்ட நாம கவனமா இருக்கணும்.-விஜய் சேதுபதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT