Advertisment

திமுக மீது நடவடிக்கை உண்டா? தொகுப்பாளினி மோனிகாவை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்!

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இன்று மேலும் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அதில் மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(ஏப்ரல்15) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காணொலி காட்சி மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துமாறு காவல்துறை திமுக-வை அறிவுறுத்தியது. இதையேற்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் காணொளி காட்சி மூலம் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் எனதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

bjp

இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார். அதில், "அப்போ நாளைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டம் கூட்டப்போகும் DMK-க்கும் இதே சட்ட ரீதியான நடவடிக்கை உண்டா! இல்லையா! இதை முதலமைச்சர் தெளிவுபடுத்துவாரா? என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு சிலர் தொகுப்பாளினி மோனிகா குறித்து பதிவிட்டு வந்தனர். மோனிகா ஒருகாலத்தில் டிவி தொகுப்பாளர் மற்றும் வானிலை செய்தி வாசிப்பாளர், இந்து மதத்தைச் சேர்ந்த இவர் கிறிஸ்துவரைக் காதலித்துத் திருமணம்செய்து கொண்டார். மோனிகா சாமுவேல் இப்போது யூடூப் சேனலில் பிரதமர் மோடியை தமிழருக்கு எதிரானவர் போல் சித்தரிப்பு செய்துவருகிறார் என்று கூறிவருகின்றனர். அதற்கு எஸ்.வி.சேகர் "வானிலை மாறும், மறுபடியும்...முதிர்ச்சியற்ற முட்டாள்(immature idiot) " என்று விமர்சித்துள்ளார்.

Speech coronavirus stalin politics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe