இந்த ஊரடங்கில் சர்வகட்சி கூட்டமாம்... திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்... கோபத்தில் திமுகவினர்!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தக் காலகட்டத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

bjp

இந்த நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்,வி.சேகர் பிரதமரின் உத்தரவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அரசுக்கு நாமகொடுத்த ஒத்துழைப்புக்கு கலர்ல மார்க் ஷீட்...மொத்த எதிர்க்கட்சிகளும் சென்னையிலயே இருக்காங்களே அதான் நமக்கு (சென்னை) சிவப்பு கலரு. அதிக எச்சரிக்ககை (High Alert). இந்த ஊரடங்குல சர்வகட்சி கூட்டமாம் என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்". எஸ்.வி.சேகரின் இந்தக் கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

admk politics S.V.sekar Speech
இதையும் படியுங்கள்
Subscribe