Advertisment

 திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பாஜக மூத்த தலைவர்...அரசியலில் பரபரப்பு!

திருப்பூரில் திமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் இளைஞரணி செயலாளருமான வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர் டிஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அதே போல் பாஜகவின் மூத்த தலைவரும் பாஜக சார்பாக கோயம்புத்தூர் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

Advertisment

dmk

bjp

திருமண விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும் போது, கருணாநிதிக்குப் பிறகு யார் என்று வருகிற போது, மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டுமில்லாமல், எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் திகழ்கிறார். அதே போல் நாங்கள்(பாஜக) இன்னும் கருணாநிதி போல் அதிகம் உழைக்க வேண்டும் என்பதைத்தான் இதிலிருந்து நான் எடுத்துக்கொள்கிறேன் என சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அடுத்து தமிழக பாஜக தலைவர் யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தமிழக பாஜக தலைவர் போட்டியில் கொங்கு மண்டலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனும், வானதி சீனிவாசனும் உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

function Leader marriage stalin
இதையும் படியுங்கள்
Subscribe