Advertisment

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நடைபெற்ற கரோனா பரிசோதனை? வெளிவந்த தகவல்!

bjp

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974- லிருந்து 31,332 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 937- லிருந்து 1,007 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,027- லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குச்சென்றுள்ளார். அப்போது அவருக்கு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் உடலில் இருக்கும் வெப்பநிலை மற்றும் பிரஷர் அளவு குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்பு உடல்நிலை குறித்த பரிசோதனைக்குப் பிறகு மோடி கிச்சன் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார்.

coronavirus modi politics pon.rathakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe