bjp leader lmurugan pressmeet at coimbatore

கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.கமாநிலத் தலைவர் எல்.முருகன், "பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது.கூடிய விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும். இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்துகேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்துவருகிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்படும். கோவையில், வரும் பிப்ரவரி 25- ஆம் தேதி நடைபெறும் அரசு விழா மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment