Advertisment

கோவில் பூசாரிகளுக்கு 10,000 கொடுக்க வேண்டும்... பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அதிரடி ட்வீட்!

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,,65,659 பேர் குணமடைந்துள்ளனர். அதோடு, கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 25- ஆம் தேதி தொடங்கிய 144 தடை உத்தரவு, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவு போட்டுள்ளது.

Advertisment

bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள், ஆகியோருக்கு மாதம் 10,000 ரூபாயை வரும் 3 மாதங்களுக்கு அறநிலையத்துறை வழங்கிட வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும், கிராம கோவில் பூசாரிகள், ஓதுவார், இசைக் கலைஞர்கள் மற்றும் பூ விற்பனை செய்வோர் ஆகியோருக்கு உதவிட வேண்டும். கொரானா தடுப்பு ஊரடங்கு சமயத்தில் நம் தர்ம கேந்திரங்களான கோவில்களைப் பராமரிக்கும் இவர்களைக்காக்க வேண்டியது நம் கடமை. தாராள மனதுடன் உதவுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

coronavirus workers temple politics h.raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe