Advertisment

குடியுரிமை சட்ட திருத்தம் இவர்களுக்கு தான்... பாஜகவின் எச்.ராஜா பதிவிட்ட புகைப்படம்!

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்து இருந்தார்.

Advertisment

bjp

அதில், மசூதிகளில் நமாஸ் செய்துவிட்டு வெளியே வந்து பஸ்களை கொளுத்துவது வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்றும், புல்வாமாவுக்கு பொங்காதவர்கள், நாட்டின் அச்சுறுத்தலுக்கு பொங்காதவர்கள், ஆம் எத்தனையோ முறை பாகிஸ்தான் இங்கு குண்டுவெடிப்பை செய்தபொழுது பொங்காதவர்கள், சீன ஊடுருவலுக்கு பொங்காதவர்கள், இப்பொழுது அந்நிய நாட்டுக்காரனை வெளியேற்றுவோம் என்றவுடன் வருகின்றார்கள் பார்த்தீர்களா? என்றும், விஷயம் வேறோன்றுமில்லை, புற்றுக்கு வெந்நீர் ஊற்றியாயிற்று நாகங்கள் வெளிவருகின்றன என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி புகைப்படம் வெளியிட்டு யாருக்கு எல்லாம் இந்த மசோதா பொருந்தும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

citizenship amendment bill h.raja politics twitter
இதையும் படியுங்கள்
Subscribe