கரோனா ஆட்கொல்லி வைரசானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 42,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.
கல்வி,செல்வம்,வீரம் மூன்றிலும் சிறந்து விளங்கியிருந்தும்கூட பாரததேசம் 800 ஆண்டுகள் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கீழும் 200 ஆண்டுகள் ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கீழும் அடிமைப்பட்டு இருந்தது. pic.twitter.com/ZYdT7gU7P4
— H Raja (@HRajaBJP) April 1, 2020
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று RSS அமைப்பை உருவாக்கிய பரம பூஜனீய டாக்டர். கேசவ பலிராம் ஹெட்கேவர் பிறந்த தினத்திற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கல்வி, செல்வம், வீரம் மூன்றிலும் சிறந்து விளங்கியிருந்தும்கூட பாரததேசம் 800 ஆண்டுகள் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கீழும், 200 ஆண்டுகள் ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கீழும் அடிமைப்பட்டு இருந்தது, நம் மக்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் அந்நியர்கள் உள்ளே வந்தார்கள். ஒரு பிரிதிவிராஜ் சவுகான் போரிலே தோற்றால் ஜெயச்சந்திரனின் துரோகம் இருந்தது. ஒரு கட்டபொம்மன் தூக்கிலே தொங்கினால் அதில்எட்டப்பனின் சதி இருந்தது, ஆகவே நாட்டு மக்களை தேசபக்த உணர்வோடு இணைப்பதற்காக RSS என்கிற அமைப்பை உருவாக்கிய ஒரு மகானின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்” என்றுகூறியுள்ளார்.