Advertisment

அழாத குறையாக கெஞ்சி... ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா... கடும் கோபத்தில் காங்கிரஸ்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் ஜாமீன் கோரி நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.விசாரணையின் முடிவில் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து 106 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த பா.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

Advertisment

bjp

Advertisment

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. சுமார் 6 வருட காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் செக்கிழுத்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். அவர் விடுதலையாகி வெளியே வந்தபோது சிறைவாசலில் அவரது மனைவி, சுப்ரமணிய சிவா உள்பட நான்கு பேர்களே இருந்தனர் என்றும், கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, சுமார் 15 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் கைதானார். சிறையில் கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், டி.வி., வீட்டிலிருந்து சாப்பாடு என எல்லா வசதிகளையும் கேட்டுப் பெற்றார் என்றும், சிறைவாசம் அவரது உடல் நலனை மிகவும் பாதித்துவிட்டது என்றும் அதனால் எட்டு கிலோ எடை குறைந்துவிட்டது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் அழாத குறையாக கெஞ்சி, கூத்தாடி ஜாமீன் பெற்றனர், கிடைத்தது ஜாமீன் தான். ஏதோ வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தது போலவும் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று விடுதலையாகி வந்தது போலவும் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க ஒரு கூட்டம் என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Speech politics p.chidambaram congress h.raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe