Advertisment

ஒரு புகாருக்குப் படுகொலையா? சரியான எதிர்வினையே பாதுகாப்பு... இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த எச்.ராஜா! 

bjp

Advertisment

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்தார். கரு.நாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் கட்சி இதுகுறித்து தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு கரு.நாகராஜனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. அதே போல் நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரவள்ளிக்கும் இடையே விவாத நிகழ்ச்சியின் போது காரசார விவாதம் நடைபெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நியூஸ் 7- ல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் பேசியதும். முரசு தொலைக்காட்சியில் சுந்தரவள்ளிஅவர்கள் பேசியதும் பா.ஜ.க. மற்றும் மோடிஜி அவர்களை விமரிசிப்பவர்களின் தரம் மக்கள் முன்பு வெட்ட வெளிச்சம் ஆக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தங்கள் தரத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி என்றும், முஸ்லீம் மத வெறியர்களின் ஆட்சேபகரமான முகநூல் பதிவிற்கு எதிராக காவல்துறையில் புகார் தந்ததால் முஸ்லீம் மதவெறியர்களால் ம.பி காண்ட்வா மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்உறுப்பினர் ராஜேஷ் கொல்லப்பட்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒரு புகாருக்குப்படுகொலையா? சரியான எதிர்வினையே பாதுகாப்பு என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Speech politics h.raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe