Advertisment

அமைச்சர் கூறிய பதில்... டாஸ்மாக் கடை குறித்து பாஜகவின் எச்.ராஜா அதிரடி!

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (14/04/2020) உரையாற்றினார். கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் கூறினார்.

Advertisment

bjp

இதனையடுத்து மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஊரடங்கு முடிந்த பிறகும், கடை திறந்திருந்தாலும் மக்களே குடிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

admk coronavirus h.raja minister Speech
இதையும் படியுங்கள்
Subscribe